தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பு: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை: தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த காமராசு, 2018-ல் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘திருநெல்வேலி மாவட்டம் தாமிரபரணி ஆற்றின் கரையில் பழமையான மண்டபங்கள், படித்துறைகள் ஏராளமாக உள்ளன. இவற்றை பழமை மாறாமல் புதுப்பிக்குமாறும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும், ஆற்றை தூய்மையாக பராமரிக்குமாறும் … Read more

“இண்டியா கூட்டணிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் ஜம்மு காஷ்மீரின் எதிர்காலத்தை பாதுகாக்கும்” – ராகுல் காந்தி

புதுடெல்லி: இண்டியா கூட்டணிக்காக அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், ஜம்மு காஷ்மீரின் எதிர்கால அடித்தளத்தை பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,“ஜம்மு காஷ்மீரில் இன்று மூன்றாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல், மாநிலத்தின் சுயமரியாதைக்கான தேர்தல், மாநில மக்களின் உரிமைக்கான தேர்தல் என்பதை நினைவில் … Read more

Rajinikanth Health | அப்பல்லோவில் ரஜினிகாந்த்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்ட ட்வீட்..

Rajinikanth In hospital: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற விளைகிறேன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்ட பதிவு

Anirudh: அஜித்தின் 'விடாமுயற்சி'க்கு BGM… விஜய்க்கு ஓப்பனிங் சாங் – அசத்தும் அனிருத் லைன்அப்

அனிருத் லைன்அப் ரஜினி, விஜய், அஜித் என டாப் ஹீரோக்களின் இசையமைப்பாளராக முதல் சாய்ஸில் இப்போது இருப்பது அனிருத் தான். அவர் டோலிவுட்டில் இசையமைத்த ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அவரின் இசையில் அடுத்து திரைக்கு வரும் படமாக ரஜினியின் ‘வேட்டையன்’ இருக்கிறது. படத்தின் டிரைலர் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அவரின் `Hukum’ வேல்ர்டு டூரின் அடுத்த பயணமாக சிங்கப்பூரிலும் வரும் நவம்பர் 30-ம் தேதி … Read more

வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1! மத்தியஅரசு தகவல்…

டெல்லி:  நாட்டில் உள்ள மாநிலங்களில் அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக, 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில்  மத்தியஅரசு தெரிவித்துள்ளது. அதேவேளையில், 2022-23 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தி (GVA) 7.3 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ. 21.97 லட்சம் கோடியாக (ரூ. 20.47 லட்சம் கோடி) உயர்ந்துள்ளது என்று சமீபத்திய ஆண்டுத் தொழில் ஆய்வு (ஏஎஸ்ஐ) தெரிவித்துள்ளது. ASI அறிக்கையின்படி, 2022-23க்கான தொழில்துறை உற்பத்தி 21 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது. … Read more

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய பாஜக அரசு நிச்சயம் மீட்கும்: மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி

ஶ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீட்டே தீரும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று மத்திய அமைச்சரும் பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான ஜிகே ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸும் இதர கட்சிகளும் 70 ஆண்டுகளாக இந்து ஒருவரை ஜம்மு Source Link

ரஜினிக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளித்தார்கள்?.. இப்போது எப்படி இருக்கிறார்?.. இதோ முழு விவரம்

சென்னை: ரஜினிகாந்த் உடல்நலக்குறைவால் நேற்றிரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கும் சூழலில் ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்களும், பிரபலங்களும் கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் ரஜினிகாந்த்துக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்பட்டதென்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. ரஜினிகாந்த்

துப்பாக்கியை துடைத்தபோது நிகழ்ந்த விபரீதம்; பாலிவுட் நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பை ஜுகு பகுதியில் தனி பங்களாவில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவர் இன்று அதிகாலை கொல்கத்தாவில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்வதற்காக காலை 4 மணிக்கே எழுந்து தயாரானார். அவர் தன்னுடன் தனது ரிவால்வரையும் எடுத்துச் செல்ல முடிவு செய்தார். இதற்காக தனது துப்பாக்கியை காலை 4.45 மணிக்கு துடைத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் எதிர்பாராத விதமாக கைபட்டு துப்பாக்கி சுட்டுக்கொண்டது. இதில் தோட்டா கோவிந்தாவின் காலில் பட்டது. உடனே காயத்துடன் கோவிந்தா தனது … Read more

பழநி முருகன் கோயில் ராஜகோபுரம் சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் ராஜகோபுரம் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2023 ஜனவரி 27-ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடந்து ஒன்றரை … Read more

மீண்டும் ‘பணிப் புறக்கணிப்பு’ போராட்டத்தை தொடங்கிய மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள்

கொல்கத்தா: பணியிடத்தில் பாதுகாப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மேற்கு வங்கத்தின் பயிற்சி இளநிலை மருத்துவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் மீண்டும் ‘முழு பணிப் புறக்கணிப்பு’ போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இளநிலை பயிற்சி மருத்துவர்கள் சங்கங்கள் மேற்கொண்ட 8 மணி நேர ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. மருத்துவமனையின் பாதுகாப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவர்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை முன்வைத்து மீண்டும் இளநிலை பயிற்சி … Read more