Amaran: கம்பீரமான சிவா… காதல் பல்லவி… படம் எப்படி இருக்கு? – Social Media Review

சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கிறது அமரன் திரைப்படம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்தை ரங்கூன் திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். 2014ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சோபியன் கிராமத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், உயிரிழந்தவர் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன். இவரது வாழ்க்கைப் பயணத்தைக் காட்டும் படமாக உருவாகியிருக்கிறது அமரன். இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு என்ன… ட்விட்டர் டிவியூக்கள் மூலம் அறியலாம்! #Amaranreview ✨️Everyone is familiar with … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க டெண்டுல்கருக்கு, டொனால்ட் டிரம்ப் அழைப்பு…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கதாக மாறியுள்ளதை அடுத்து முடிந்தவரை அதிக வாக்குகளைப் பெற இரண்டு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், வட கரோலினா மாகாண வாக்காளர்களை தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்ய அனுப்பிய பதிவில் இந்தியர் ஒருவரின் எக்ஸ் கணக்கை குறிப்பிட்டுள்ளார் … Read more

நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

மும்பை, பிரபல பாலிவுட் நட்சத்திரமான சல்மான்கானுக்கு பஞ்சாப் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வந்து உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மும்பை பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்-அப் நம்பருக்கு சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் விடுத்த நபரை போலீசார் … Read more

நான் ஓய்வு பெற இந்தியாதான் காரணம் – மேத்யூ வேட்

சிட்னி, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேத்யூ வேட் (வயது 36), இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், 15 ஐ.பி.எல். போட்டிகளிலும் ஆடி உள்ளார். டெஸ்ட்டில் 1613 ரன்னும், ஒருநாள் போட்டிகளில் 1867 ரன்னும், டி20 போட்டிகளில் 1202 ரன்னும் அடித்துள்ளார். இவர் கடந்த 2011ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். மேலும், இவர் கடந்த 2021ம் ஆண்டு … Read more

டிரம்ப் நிலையற்றவர்.. பழிவாங்க துடிப்பவர்: இறுதிக்கட்ட பிரசாரத்தில் கமலா ஹாரிஸ் விளாசல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் (வயது 60), டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்வதுடன் வாக்காளர்கள் நல்ல முடிவை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அவ்வகையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஷ் வாஷிங்டன் டி.சி.யில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:- டொனால்ட் டிரம்ப் தனது கருத்திற்கு உடன்படாத அமெரிக்க மக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த … Read more

இத்தாலிய தூதுவர் பிரதமரை சந்தித்தார்

இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் அவர்கள் நேற்று (30) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். இச்சந்திப்பில் இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகள் மீள உறுதிப்படுத்தப்பட்டதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இச்சந்திப்பில் இத்தாலியில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் குறிப்பாக பயிற்றப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கமுடியுமான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. தொழில் பயிற்சி அதிகார சபையின் ஊடாக இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதன் முக்கியத்துவத்தை … Read more

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதவி ஆய்வாளர் சரவணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரவணன் (36) என்பவர் இன்று (அக்.31) அதிகாலை சுமார் 1 மணியளவில் பரமக்குடி நகரில் இரவு நேர ரோந்துப் பணியின்போது கீழே … Read more

வல்லபபாய் படேல் பிறந்த தினம்: ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை

காந்திநகர்: சர்தார் வல்லபபாய் படேலின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடி வியாழக்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31-ம் தேதி வல்லபபாய் படேலின் பிறந்த தினத்தை நினைவுகூரும் விதமாக ராஷ்ட்ரீய ஏக்தா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பிரம்மாண்ட விழா நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக் கணிப்புகள்: கமலா ஹாரிஸுக்கு குறையும் ஆதரவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரெம்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதில் கமலா ஹாரிஸுக்கு 44 சதவீத மக்களும், டொனால்ட் ட்ரெம்புக்கு 43 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ராய்ட்டர் நிறுவனம் மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் அமைப்பு இணைந்து, கடந்த வெள்ளி முதல் ஞாயிறு வரையில் 3 நாள் தேர்தல் … Read more