தீபாவளி பண்டிகை: தமிழக கோயில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாடு முழுவதும் இன்று (அக்.31) தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையில் இருந்தே, புத்தாடைகள் உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்கள் உற்சாகமாக தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலை முதலே, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. பண்டிகை … Read more

“நகர்ப்புற நக்சல்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” – பிரதமர் மோடி

ஏக்தா நகர்: நகர்புற நக்சல்களின் புதிய மாதிரி உருவாகி வருகிறது; அந்த சக்திகளை அடையாளம் காண வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டினை சீர்குலைத்து, அராஜகத்தைப் பரப்பி, உலகில் இந்தியா பற்றிய எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தின் ஏக்தா நகரில் உள்ள … Read more

சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை

காபூல்: ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின் முகங்களை காட்டுவதற்கும் தடைவிதிக்கும் அந்நாட்டு அறநெறிச் சட்டங்களில் சமீபத்திய கட்டுப்பாடு இதுவாகும். அங்கு ஏற்கனவே பெண்கள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், பொது இடங்கள், வேலைக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கனின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை … Read more

அமரன் விமர்சனம் : துப்பாக்கிய கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?

Amaran Movie Review In Tamil: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம். 

Railway Passengers | தமிழகத்தில் ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரங்களை வெளியிட்ட தெற்கு ரயில்வே

Indian Railways Latest News In Tamil: நவம்பர் மாதத்தில் தாமதமாக புறப்படும் ரயில்களும், ரத்து செய்யப்படும் ரயில்கள், மாற்று வழியாக செல்லும் ரயில்கள் குறித்து தெற்கு ரயில்வே தகவல் அளித்துள்ளது.

“மீண்டும் சிவகார்த்திகேயன், சூரி கூட்டணி… ஒரு ஐடியா இருக்கு!” – இயக்குநர் பொன்ராம் எக்ஸ்க்ளூஸிவ்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு ஜானர் திரைப்படங்கள் கொத்துக் கொத்தாக திரைக்கு வரும். அந்த வகையில் கிராமங்களை கதைக்களங்களாக கொண்ட திரைப்படங்கள் பலவற்றில் வன்முறை காட்சிகள் வரிசைக்கட்டிக் கொண்டிருந்தது. அந்தச் சூழலில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் என அடுத்தடுத்த கிராமத்து படங்களில் சிரிப்பு பட்டாசுகளை கொழுத்தி போட்டு குழந்தை முதல் முதியவர்கள் வரை திரையரங்குகளை நோக்கி கொண்டாட்டமாக வரவைத்த பெருமை இயக்குநர் பொன்ராமை சாரும். இயக்குநர் பொன்ராம் மீண்டும் அதே கிராமத்துக்கு கதைக்களத்தோடு தேனி … Read more

ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை… அமேசானின் நீடிக்கும் சலுகை விற்பனை…

இ-காமர்ஸ் தளமான அமேசானில், அமேசான் கிரேட் பெஸ்டிவ் சேல்  (Amazon Great Festive Sale) நிறைவடைந்தது. ஆனால் பண்டிகை கால விற்பனையில் கிடைக்கும் சலுகைகள் சில பொருட்களுக்கு இன்னும் கிடைக்கின்றன. நீங்கள் இன்னும் குறைந்த விலையில் iPhone-Samsung ஃபோன்களை வாங்க முடியும். வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில், இ-காமர்ஸ் இணையதளம் பண்டிகைக் கால சலுகைகளை சில பொருட்களுக்கு நீட்டித்துள்ளது. அமேசான் பண்டிகை விற்பனையின் (Amazon Festrive Sale) கீழ் கிடைக்கும் சலுகைகளை நீங்கள் இன்னும் பயன்படுத்திக் கொள்ளலாம் … Read more

தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை

வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தட்சிணாமூர்த்தி சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை பல்லாண்டுகளுக்கு முன்பு சித்தர் ஒருவர், இங்கு வேதபாடசாலை அமைத்து, மாணவர்களுக்கு வேதம் கற்பித்து வந்தார். அப்போது வேதத்தின் வடிவமாகத் திகழும் தெட்சிணாமூர்த்திக்கு, இங்கு சிலை வடித்து, கோயில் எழுப்பினார். தென் திசை கடவுளான தெட்சிணாமூர்த்தி, தெற்கு நோக்கித்தான் இருப்பார். ஆனால் இங்கு இவர் வடக்கு நோக்கியிருப்பது, வேறெங்கும் காண முடியாத அமைப்பு. எனவே தலம், “வடகுருதலம்” எனப்படுகிறது. நவக்கிரகங்களில் குரு பகவான், வடக்கு நோக்கி … Read more

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்- மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

புதுடெல்லி, இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், 1,500-க்கு மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சக தேர்வர்கள் மட்டுமின்றி அவர்களது பெற்றோர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, நுழைவுத்தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாகவும் நடத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. … Read more

முதல் ஒருநாள் போட்டி: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆன்டிகுவா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும் அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்நிலையில்,,இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இன்றிரவு 11.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது . ஷாய் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். … Read more