ஸ்பெயினில் திடீர் வெள்ளம் – 51 பேர் பலி

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா மாகாணத்தில் நேற்று திடீரென கனமழை பெய்தது. கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளை சூழ்ந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும், சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். அதேவேளை, கனமழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. வீடுகளில் வெள்ள நீர் … Read more

Skoda Kylaq launch soon – கைலாக் மூலம் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நுழையும் ஸ்கோடா

பூமியில் இருந்து நிலவுக்கு பயணித்து திரும்பிய தொலைவுக்கு இனையாக சுமார் 8,00,000 கிமீ சோதனை ஓட்டத்தின் மூலம் நிறைவு செய்துள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ள புதிய கைலாக் காம்பேக்ட் எஸ்யூவி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு ஜனவரி 2025-ல் வெளியிடப்பட உள்ளது. கடும் போட்டிகளுக்கு இடையே நான்கு மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட சந்தைக்கான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் சார்பாக இந்தியாவிலே உருவாக்கப்பட்ட MQB A0 IN பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்ற புதிய கைலாக் மாடலில் 1.0 … Read more

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர். இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை … Read more

புதுச்சேரியில் பொதுப்பணித் துறை தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு புதிய முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புதுச்சேரியில் வெளியான பொதுப்பணித்துறை தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டு, புதிய முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இளநிலைப்பொறியாளர் பதவிக்கு 99 பேரும், ஓவர்சீர் பதவிக்கு 69 பேரும் என 168 பேர் தேர்வாகியுள்ளனர். புதுச்சேரி பொதுப்பணித் துறையில் இளநிலை பொறியாளர் – 99, ஓவர்சீர் – 69 என மொத்தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த 27ம் தேதி நடந்தது. தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருந்தது. தாள் 1-ல் … Read more

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தெலங்கானா அரசு உத்தரவு

ஹைதராபாத்: சமீபகாலமாக பல்வேறு உடல் உபாதைகள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் முட்டையிலிருந்து செய்யப்படும் மையோனைஸுக்கு தெலங்கானா அரசு ஓராண்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புதன்கிழமை (அக்.30) முதல் அமலுக்கு வரும் இந்த தடை உத்தரவு ஒரு ஆண்டுகாலத்துக்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு உணவு வகையான மையோனைஸ் பிரதானமாக சாண்ட்விச், ஷவர்மா, பர்கர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் எண்ணெய் சேர்த்து உருவாக்கப்படும் இது பாட்டில்களிலும், பாக்கெட்டுகளிலும் அடைத்து விற்பனை … Read more

அமைச்சர்களுக்கு ஆடை விதிகள் ஏதேனும் இருக்கிறதா ? துணை முதல்வர் உதயநிதி டி-சர்ட் வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது திமுகவின் உதயசூரியன் சின்னம் பதித்த டி-சர்ட் அணிந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட சில எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி டி-சர்ட் அணிந்து வருவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய ஆடை விதிகள் தொடர்பாக கடந்த 2019ஆம் ஆண்டு, ஜூன் 1ஆம் தேதி, … Read more

பிக் பாஸ் ராஜூ மனைவியுடன் வெளிநாட்டு பயணம்.. நயன் – விக்கிக்கே டஃப் கொடுப்பாங்க போல!

சென்னை: பிக் பாஸ் ராஜூ மோகன் தனது மனைவி தாரிகாவுடன் வெளிநாட்டுக்கு ஜாலி ட்ரிப் மேற்கொண்டுள்ளார். அந்த போட்டோவை ராஜூ இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்ததைத் தொடர்ந்து லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ராஜூ ஜெயமோகன். இவர் கனா காணும்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் மாலைதீவு உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை   ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (MASOOD IMAD) ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு இன்று (30) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும், மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. … Read more

Diwali Shopping: ஈரோடு கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம் | Photo Album

ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை விற்பனை ஆடை … Read more