“இந்தியாவின் முதல் அனலாக் விண்வெளிப் பயணம் லேவில் தொடங்கப்பட்டது!” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளது. எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கு உதவும் வகையில் வேற்று கிரக நிலைகளின் சவால்களை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ தனது முதல் அனலாக் விண்வெளி பயணத்தை இன்று செயல்படுத்தியுள்ளது. இந்தியா பல விண்வெளிப் பயணங்களைத் தொடங்க திட்டமிட்டிருந்தாலும், எதிர்கால விண்வெளி வீரர்கள் வேற்று கிரக பயணங்களில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்ள இந்த புதிய பணி உதவும். […]
