மும்பை: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சிவசேனா பெண் வேட்பாளர் ஷைனா என்சியை ‘இறக்குமதி செய்யப்பட்ட மால்’ என உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த அரவிந்த் சாவந்த் விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது இண்டி கூட்டணிக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் வேட்பு மனுக்களைத் தாக்கல் முடிவடைந்து, கூட்டணி கட்சிகளிடையே தொகுதி உடன்பாடும் […]