சாய் பல்லவி – சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தைப் பார்த்து கண்கலங்கியதாக நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் அமரன் திரைப்படக் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “அமரன் உண்மையில் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு நம் அனைவரின் பொருத்தமான அஞ்சலி.

சகோதரன் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இருவரும் இந்தப் படத்தில் மிக முக்கியமான பொறுப்பை சிறப்பாக நிறைவேற்றி, அதை நீங்கள் எளிதாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களுக்கும், சிறப்பான ஒரு படைப்பைக் கொண்டுவந்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, அன்பரிவ், ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் சாய் ஆகியோருக்கும், இதை தயாரித்து வெளியிட்ட என் உலக நாயகனுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு திட்டத்தின் இந்த பிரமாண்டத்தை தயாரித்து பார்வையாளர்களை சென்றடையச் செய்ததற்காக மகிழ்மன்றத்துக்கும் பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.