இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பவதாரிணியின் கடைசிப் படம்!
கடந்த ஜனவரி மாதம் இளையராஜாவின் மகள் பவதாரிணி இயற்கை எய்தினார். இவரது இழப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரின் மறைவுக்குப் பிறகு இவரின் குரலை பயன்படுத்தி ஏ.ஐ மூலம் விஜய்யின் `கோட்’ திரைப்படத்திற்காக ஒரு பாடலை ரெக்கார்ட் செய்திருந்தார்கள். அந்தப் பாடல் பவதாரிணியின் குரலில் வந்தால் நன்றாக இருக்கும் என்பதை திட்டமிட்டு இதனை யுவன் ஷங்கர் ராஜாவும் வெங்கட் பிரபுவும் சாத்தியப்படுத்தியிருந்தார்கள். தற்போது பவதாரிணி கடைசியாக இசையமைத்த திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியிருக்கிறது.
Honored to present #HeyKarukaruva 1st single from the last work #PuyalilOruThoni of my beloved sister #Bhavatharini
@bgpictures_2019 @penmatfed @nalliah_romila @syed_riaz_official @iharishrajan @jaleel4u
— Raja yuvan (@thisisysr) October 31, 2024
இசையமைப்பாளாராக பல படங்களுக்கு இசையமைத்தவர் கடைசியாக `புயலில் ஒரு தோணி’ என்ற ஒரு திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் `ஹே கருவக்காரா’ என்ற பாடல் வெளியாகியிருக்கிறது. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷும் பின்னணி பாடகி மானசியும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடலாசிரியர் ஸ்நேகன் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார்.
`ஜென் – சி’ மோடில் ஆர்.ஜே பாலாஜி!
ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் `சொர்கவாசல்’ படத்தின் பணிகள் ஒரு புறம் நடந்துக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக இவர் சூர்யாவை வைத்து இயக்கும் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படியான பிஸி லைப் அப் வைத்திருக்கும் ஆர்.ஜே.பாலாஜி தற்போது இதுவரை நாம் அவரிடம் பார்த்திடாத மோடில் களமிறங்கியிருக்கிறார். இவர் நடிக்கும் `ஹாப்பி எண்டிங்’ திரைப்படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. `ஜென் சி’ வைப் மீட்டருக்கேற்ப சுவாரஸ்யமான வகையில் எடிட் செய்யப்பட்ட அந்த டீசர் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

`எல்.சி.யு-‘விற்கு ரெடி?
இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் `பென்ஸ்’ திரைப்படமும் `எல்.சி.யு’விற்குள் வரும் என அறிவித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தின் கதை லோகேஷ் கனகராஜுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில் மம்முட்டியின் பழைய பேட்டி ஒன்றும் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது. `காதல் தி கோர்’ படத்தின் ப்ரோமோஷன் சமயத்தில் `லோலேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து இயக்கும் படத்தில் நடிக்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுபப்பட்டது. அதற்கு இவர் `அதற்காக என்னை அணுகவில்லை. ஆனால் நான் தயார். அதற்காக எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். `எல்.சி.யு’வில் இணைய நான் தயார்’ எனக் கூறியிருந்தார். இந்த தகவலும் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இயக்குநர் ப்ருத்விராஜின் அடுத்த ரிலீஸ்!
ப்ருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு லூசிஃபையர் படத்தின் முதல் பாகம் வெளியாகியிருந்தது. அந்த பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டம் பாகமான `எல்2- எம்புரான்’ படத்தை எடுத்து வந்தார்கள். தற்போது அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் அத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்திருக்கிறார்கள், அடுத்தாண்டு மார்ச் மாதம் 27-ம் வெளியாகிறது.

ஹனுமான் யுனிவர்ஸின் ரிஷப் ஷெட்டி!
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் `ஹனுமான்’ திரைப்படம் இந்தாண்டு ஜனவரி மாதம் வெளியாகி ஹிட்டடித்தது. இங்கு கோலிவுட்டில் `லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்’ போல டோலிவுட்டில் `பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸ்’. `ஹனுமான்’ திரைப்படத்தின் மூலம் இந்த யுனிவர்ஸ் உருவானது. இந்த யுனிவர்ஸின் இரண்டாவது திரைப்படமான `ஜெய் ஹனுமான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டிருந்தார்கள். இதில் ஹனுமானாக கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிக்கிறார்.