மகாராஷ்டிராவில் வரும் 20-ம் தேதி நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது. இத்தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் கடைசி வரை மல்லுக்கட்டிக்கொண்டிருந்தன.
தற்போது கட்சிகளின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தி வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்திருக்கும் கட்சி நிர்வாகிகளிடம் பேசி வேட்பு மனுவை திரும்ப பெற அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) தலைவர் சரத்பவார் தனது சொந்த ஊரான பாராமதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ”ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு தேவையான பணம் போலீஸ் வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இது குறித்து அதிக அளவில் வெளிப்படையாக பேச விரும்புகிறேன். ஆனால் மேற்கொண்டு பேசினால் இது தொடர்பாக தகவல் கொடுத்த அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அது குறித்து பேசவிரும்பவில்லை” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது இது போன்று செய்திருக்கவேண்டும். எனவேதான் சரத்பவார் இது போல் பேசி அவரது சுயரூபத்தை காட்டுகிறார்.
தேசியவாத காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. மும்பையில் கோபால் ஷெட்டி பா.ஜ.க மூத்த தலைவர். அவர் போரிவலி தொகுதியில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து தாக்கல் செய்திருக்கும் மனுவை திரும்ப பெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
பாராமதி தொகுதியில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பாக அஜித்பவாரின் சகோதரர் மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். எனவே சரத்பவார் பாராமதி தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். பாராமதியில் இரண்டாவது முறையாக பவார் குடும்பத்தினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb