மலிவான கட்டணத்தில் தினம் 2GB டேட்டா… ஏர்டெல் வழங்கும் ஒரு வருட ரீசார்ஜ் பிளான்

ஏர்டெல் 350 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் பயனர்களை கொண்டுள்ள நிலையில், தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், அவ்வப்போது பல்வேறு வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ள நீண்டகாலத்திற்கான திட்டம், ஒரு வருடம் அல்லது 365 நாட்கள் செல்லுபடியாகும் திட்டமாகும். வரம்பற்ற 5G இணைய அணுகலை கொண்டது. இதன் விளைவாக, ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் வழங்கும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டங்களுக்கு, கடும் போட்டியை கொடுக்கும் வகையில் உள்ளது என்றால் மிகையில்லை

ஏர்டெல் 365 நாள் ரீசார்ஜ் திட்டம்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி (Airtel Prepaid Plans) வருகிறது.  அந்த வகையில், பாரதி ஏர்டெல் வழங்கும் ஒரு வருடத்திற்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினசரி 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது,  ஆண்டு முழுவதும் மொத்தமாக 720ஜிபி. இந்த கணிசமான டேட்டா சலுகைக்கு கூடுதலாக, பயனர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த டெலிகாம் நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பையும், இலவச தேசிய ரோமிங்கின் வசதியையும் பெறுகிறார்கள்.

மேலும், இந்தத் திட்டம் தினசரி 100 இலவச SMS செய்திகள் போன்ற கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. 5G கவரேஜ் பகுதியில் அமைந்துள்ள 5G நெட்வொர்க்கிற்கு இணக்கமான ஸ்மார்ட்ஃபோனைக் கொண்ட சந்தாதாரர்கள் வரம்பற்ற 5G டேட்டாவை கூடுதல் கட்டணமின்றி அணுகலாம். இந்த விரிவான ரீசார்ஜ் திட்டத்தினை பெற ரூ. 3,599  செலுத்த வேண்டும்.

கூடுதலாக, ஏர்டெல் மூன்று புதிய டேட்டா ரீசார்ஜ் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தியுள்ளது, பயனர்கள் தங்கள் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பின்னரும் தொடர்ந்து பலன்களை வழங்குகின்றன. ரூ.161, ரூ.181 மற்றும் ரூ.351  என்ற கட்டணங்களில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மூலம் 50ஜிபி வரை அதிவேக டேட்டாவை பெறலாம்.

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வேடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், வாடிக்கையாளர்கள் பி எஸ் என் எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆகஸ்டில், BSNL மட்டுமே அதிக சந்தாதாரர்களைப் பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ளது. 2.5 மில்லியன் புதிய பயனர்கள் அரசுத் துறை நிறுவனமான BSNL-க்கு மாறியுள்ளனர் . ரிலையன்ஸ் ஜியோ 4 மில்லியன் சந்தாதாரர்களை இழந்தது. பார்தி ஏர்டெல் 2.4 மில்லியன் சந்தாதாரர்களை இழந்து சரிவை சந்தித்தது. வோடபோன் ஐடியா 1.9 மில்லியன் சந்தாதாரர்களை இழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.