சாய் பல்லவி – சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்தத் திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தன் எக்ஸ் பக்கத்தில்,“ அமரன் படம் பார்க்க நேர்ந்தது. இராணுவ வீரர்களின் நேர்மை, வீரம், தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். மக்களைக் காக்க ஒரு வீரர் தன்னை தியாகம் செய்யும்போது, ஒரு குடும்பத்தின் இழப்பு என்னவென்பது தெளிவாக எடுத்துக்கூறப்பட்டிருக்கிறது.
நம்மைவிட ராணுவ வீரர்கள் ஏன் சிறப்பானவர்கள் என்றால், பெருமையுடன் ராணுவ உடையை அணிந்துக்கொண்டு, விருப்பத்துடன் போர் களத்துக்குச் செல்வார்கள். ஒரு ராணுவ வீரரின் குடும்பம் அதைப் பெருமையாக கருதும். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014-ம் ஆண்டு, அப்போது நான் காவல்துறைப் பொறுப்பில் இருந்தேன். அவர் நம் தேசத்துக்காக செய்த தியாகம், எங்களுக்கு எதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வைத் தந்தது. அந்த நினைவுகள் எனக்கு அப்படியே இருக்கிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் சிறப்பான இயக்கம், நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலகில் மிக முக்கியமானப் படம், அசாதாரணமான நடிப்பில் சாய்பல்லவி, அழுத்தமான இசை, சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருந்தது. இந்தப் படத்தை தயாரித்த கமல் ஹாசனுக்கு நன்றி. இந்தப் படம் ராணுவ வீரர்களுக்கும், நாட்டுக்காக தங்களை இழந்தவர்களுக்கும் சிறந்த மரியாதையும், அஞ்சலியும் என்றே நினைக்கிறேன். இந்திய ராணுவம் வாழ்க. நீங்கள்தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறோம். ” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.