தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க “அனைவரிடமும் இணக்கம் வேண்டி நான் தெலுங்கு குறித்து பேசிய குறிப்புகளை திரும்பப் பெறுகிறேன்” என்று நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டுள்ளார். பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு நடிகை கஸ்தூரி பேசினார். “300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் […]