பால் பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை – மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி. வீ. எச். கோத்தாபய

மில்கோ நிறுவனத்தின் நிதி நிலைமை தொடர்பில் விரைவாக தீரமானங்களை எடுப்பதுடன், முடிந்தவரை விரைவில் பால் பண்ணையாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளைக் கொடுத்து, அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான சக்தியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் புதிய தலைவர் ஜி. வீ. எச். கோத்தாபய தெரிவித்தார்.

மில்கோ நிறுவனத்தின் நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அதன் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்;

மிகவும் சிக்கலான நிலைமையில் புதிய அரசாங்கத்தினால் இந்த நிறுவனத்தை மீண்டும் இலாபமீட்டும் வினைத்திறனான நிறுவனமாக மில்கோ நிறுவனத்தை மாற்றுவதற்கான பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்துடன் புதிய பணிப்பாளர் சபையுடன் இணைந்து நாம் திட்டமொன்றைத் தயாரித்துள்ளோம். அத்திட்டப்படி இந்த வருடத்தின் ஒக்டோபர் அல்லது நிறுவனத்தைப் பொறுப்பேற்று முதலாவது மாதத்திற்குள் நிறுவன வரலாற்றில் அதிகூடிய விற்பனையை மேற்கொள்வதற்கு எமக்கு முடிந்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் இந்த நிறுவனத்தில் இரண்டு பில்லியன் நிதி அதிகரிப்பு பெறப்பட்டுள்ளது.

மில்கோ நிறுவனத்தின் உற்பத்திகள் கிடைப்பதில்லை என்று அதிகமான நுகர்வோரின் முறைப்பாடு காணப்பட்டது. அவை உரிய முறைப்படி திருத்தம் செய்யயப்பட்டு வருகின்றன. எனவே மிகவும் விரைவில் தரமான எமது நிறுவன உற்பத்திகளை தமக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். அத்துடன், புதிய உற்பத்திகள் பலவற்றையும் இந்தக் குறுகிய காலத்தினுள் சந்தைக்கு அனுப்ப முடிந்துள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் நிறுவனத்தின் சகல ஊழியர்களும் ஒரு குழுவாக ஒரே நோக்கத்துடன் செயற்படுவதற்கும் முடிந்துள்ளது.

குறுகிய காலத்தினுள் மீண்டும் புதியதொரு இலாபமீட்டும், கிராமியப் பொருளாதாரத்தை முன்னேற்றும், பால் பண்ணையாளர்களைப் பாதுகாக்கின்ற மற்றும் நாட்டு மக்களுக்கு சிறந்த பால் உற்பத்திகளை வழங்கும் நிறுவனமாக மாற்றுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட தலைவர் ஜி. வீ. எச். கோத்தாபய ;

மில்கோ அல்லது ஹைலண்ட் எனும் பெயரில் செயற்படும் பால் உற்பத்தி நிறுவனம் முற்று முழுதாக அரச நிறுவனமாகும். கிராமிய பால் பண்ணையாளர்களிடமிருந்து பாலை சேகரித்து, போஷாக்கான பால் உற்பத்திகளைத் தயாரித்து, அவற்றை நாட்டு மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதே இந்நிறுவனத்தின் பொறுப்பாகும்.

இந்த நிறுவனம், புதிய அரசாங்கம் நாட்டை பொறுப்பேற்றதன் பின்னர் புதிய தலைவருடன் புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டது. அதன்போது நிறுவனத்தின் நிதிநிலைமை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

தற்போது இந்த நிறுவனம் 1.8 பில்லியன் அல்லது 1800 மில்லியன் அளவிலான வங்கி மேலதிகப்பற்றுடன் தான் இயங்குகிறது. இதற்கு வங்கி மேலதிகப்பற்றுடன் நிறுவனம் வருடத்திற்கு வங்கிக்கு வட்டியை மட்டும் 240 மில்லியன் ரூபாவை விட அதிக தொகையை செலுத்த வேண்டியிருந்தது. அதுதவிர நிறுவனத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமான மட்டத்தில் காணப்பட்டது.

ஏனெனில் நிறுவனத்திற்கு பால் வழங்குகின்ற பண்ணையாளர்களின் கொடுப்பனவுகளை குறித்த காலப்பகுதியினுள், செலுத்த முடியாது, திட்டமிடப்பட்டவாறு இரண்டு வார காலத்தினுள் செலுத்த வேண்டி இருப்பினும் அக்கொடுப்பனவு அதனை. விட மேலதிகமாக காலம் தாழ்த்தியே வழங்கப்பட்டது.

அது மாத்திரமன்றி நிறுவனத்தின் உள்ளக செயற்பாடுகளை எடுத்து நோக்கும் போது, இந்த நிறுவனத்தை விற்பனை செய்வதற்காக விசேட சுற்று நிருபங்கள் தயாரிக்கப்பட்டு இருந்தாலும், அதற்கு ஏற்றவாறு இந்த நிறுவனத்தை வீழ்ச்சியடையச் செய்வதற்கும், ஊழியர்களை இடமாற்றுவது, பதவி உயர்த்துவது, ஆட்சேர்ப்பு என்பவற்றை நிறுத்தி சுற்று நிருபம் தயாரிக்கப்பட்டு, மிகவும் அதிக அளவிலான ஊழியர்கள் பற்றாக்குறையுடன் நிறுவனம் செயல்பட்டது. மேலும், நிறுவனத்தின் உள்ளக கணக்காய்வுப் பிரிவு பல வருடங்களாக செயற்பாடுகள் இன்றி மூடப்பட்டிருந்தது.

அதனால் நிறுவனத்தின் கணக்கு சரியான முறையில் பரிசீலிக்கப்படாது நிறுவனத்தில் என்ன நடந்தது என்ற சரியாக கணக்காய்வு இடம் பெறவில்லை. அதனால் சரியான நிதி நிலைமைகள், வரவு செலவு மற்றும் கடந்த கால நிலைமைகள் என்பன தொடர்பாக சரியாக அறிய முடியவில்லை.

இது தொடர்பாக விசாரணைகள் நடாத்தப்படுவதுடன், தற்போது இது குறித்து உள்ளக கணக்காய்வும் இடம்பெறுகின்றது.

அதனால் எதிர்காலத்தில் கடந்த காலங்களில் என்ன நடந்தது என்று இந்நிறுவனத்தின் நிலைமை தொடர்பாக சரியாக அறிந்து கொள்ள முடியும் என எதிர்பார்ப்பதாகவும் புதிய தலைவர் தெளிவுபடுத்தினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.