சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘அமரன்’. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்தப் படத்துக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் அரசியல் பிரமுகர்களும் கூட தங்களின் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க கமல்ஹாசனின் ராஜ் ஃபிலிம் இன்டெர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் ஆகியோர் படக்குழுவினரை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கின்றனர். அது மட்டுமின்றி நடிகர் சூர்யா, “அமரன் படத்தின் மூலம் மேஜர் முகுந்த் மற்றும் இந்து ரெபேக்காவின் உலகத்தைக் காண முடிந்தது. இந்தப் படத்தில் அனைவரும் இதயப்பூர்வமாகப் பணியாற்றி இருக்கின்றனர்” என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ஜோதிகா, “அமரன் படக்குழுவுக்கு சல்யூட். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியை நினைத்து பெருமை கொள்கிறேன். இந்து ரெபேக்கா வர்கீஸின் தியாகம் இதயங்களை தொட்டது.
மேஜர் முகுந்த் வரதராஜன்… உங்களின் வீரத்தை ஒவ்வொரு குடிமகனும் கொண்டாடுகின்றனர். உங்களை போன்றே எங்களின் குழந்தைகளையும் நாங்கள் வளர்க்க விரும்புகிறோம்” என்று பாராட்டி நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
Thanks to @Suriya_offl Sir, #Jyothika ma’am and legendary actor #Sivakumar Sir for their presence and blessings for Team #Amaran! Their encouragement is a true inspiration as we share this story of bravery and love.!#AmaranMajorSuccess #MajorMukundVaradarajan #KamalHaasan… pic.twitter.com/4WRFBKNSCs
— Raaj Kamal Films International (@RKFI) November 5, 2024
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…