IPL 2025: ஆர்சிபி குறிவைக்கும் 3 Uncapped வீரர்கள் – மெகா ஏலத்தில் விராட் கோலியின் விருப்பங்கள்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் இம்மாத இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் நவ. 24,25 ஆகிய இரண்டு நாள்கள் மெகா ஏலம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. 

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்துள்ளன. மேலும் பல முக்கிய வீரர்களும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், மேக்ஸ்வெல், ரபாடா, ஜாஸ் பட்லர் என முன்னணி வீரர்கள் பலரும் ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். 

ஆர்சிபி குறிவைக்கும் 3 Uncapped வீரர்கள்

குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bangalore) விராட் கோலி, ரஜத் பட்டிதார், யாஷ் தயாள் ஆகிய மூவரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு அதிக தொகையுடன் ஏலத்திற்கு செல்கிறது. கேப்டன் ஃபாப் டூ பிளெசிஸ், ஆஸ்தான வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், அதிரடி பேட்டர்கள் வில் ஜாக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், கேம்ரூன் கிரீன் உள்ளிட்டோரை ஆர்சிபி தக்கவைக்கவில்லை. ஐபிஎல் மெகா ஏலத்திற்கும் 3 RTM கார்டுகளுடன் ஆர்சிபி செல்கிறது. விராட் கோலி (Virat Kohli) மீண்டும் ஆர்சிபி அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கவும் வாய்ப்புள்ளது. 

அந்த வகையில், ஆர்சிபிக்கு இளம் வீரர்கள் நிச்சயம் தேவை எனலாம். மிடில் ஆர்டர் பேட்டிங்கிற்கும், புதிய பந்தில் பந்துவீசுவதற்கும் இந்திய இளம் வீரர்களை ஆர்சிபி எடுத்தாக வேண்டும். இந்நிலையில், வரும் ஐபிஎல 2025 ஏலத்தில் ஆர்சிபி (RCB) குறிவைக்கும் 3 Uncapped வீரர்களை இங்கு காணலாம். 

அன்சுல் கம்போஜ்

மும்பை இந்தியன்ஸ் அணி அன்சுல் கம்போஜை (Anshul Kamboj) எடுக்க முட்டிமோதும். இருப்பினும் அந்த அணியிடம் RTM இல்லாததாலும், ஆர்சிபியிடம் ஏலத்தில் அதிக தொகை இருப்பதாலும் அன்சுல் கம்போஜை நல்ல விலைக்கு எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இவர் நன்கு உயரமான பந்துவீச்சாளர் என்பதாலும் புதிய பந்தில் மட்டுமின்றி டெத் ஓவரிலும் வித்தைக் காட்டக்கூடிய இளம் இந்திய வீரர் என்பதால் ஆர்சிபி இவருக்கு துணிந்து கோடிகளை அள்ளிவீசும் எனலாம். , 

அஷுடோஷ் சர்மா

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய மிடில் ஆர்டர் ஹிட்டர் எனலாம். தினேஷ் கார்த்திக் விட்டுச்செல்லும் அந்த பொறுப்பை அஷூடோஷ் சர்மாவால் (Ashutosh Sharma) நிவர்த்தி செய்ய இயலும். பஞ்சாப் கிங்ஸ் அணியும் இவரை எடுக்க முயற்சிக்கும் என்றாலும் ரூ.10 கோடிக்கு தாண்டும்போது ஆர்சிபிக்கு போட்டி இருக்க வாய்ப்பு குறைவு. எனவே, ஆர்சிபி இவரை எடுக்க முழு முயற்சியை எடுக்கும். 

மணிமாறன் சித்தார்த்

தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த் (Manimaran Siddharth) கடந்தாண்டு லக்னோ அணிக்காக சிறப்பான இடது கை சுழற்பந்துவீச்சாளராக செயல்பட்டார். பவர்பிளேவில் இவருடைய சிறப்பான ஓவர்கள் தொடக்க பேட்டர்களை விக்கெட்டுகளை நிச்சயம் பெற்றுத்தரும். ஆர்சிபியில் சஹாலுக்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இல்லை என தொடர்ந்து கூறப்படுவது உண்டு. எனவே இளம் வீரராக இவரை எடுத்துவைத்துக்கொண்டு மற்றொரு பார்ட் டைம் ஆப்-ஸ்பின்னரை கூட ஆர்சிபி எடுக்க முயற்சிக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.