LCU: "கூலி, கைதி 2, ரோலக்ஸ், அடுத்து…" – 'எல்சியூ லைன் அப்' சொல்லும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் `கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஒருபுறம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

`எல்.சி.யு’ என்ற ஒரு சினிமா யுனிவர்ஸ் இவருக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கியிருக்கிறது. அது அடுத்தடுத்து இவர் எப்படியான திரைப்படங்களைக் கொடுக்கப் போகிறார், தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரையும் எப்போது ஒரே படத்தில் இணைக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியிலிருந்து வருகின்றன. இது தொடர்பாக தற்போது `தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

நடிகர்கள் ரஜினி காந்த், கமல் ஹாசன் குறித்து கூறுகையில், “கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி சார் ஒரு இயக்குநரின் நடிகர் என்பதை இந்த நாட்களில் நான் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாக யோசித்துச் செய்வார். திரையிலும் நிதர்சனத்திலும் அவர் மேஜிக்குகளை நிகழ்த்துவார். சஜஸன் ஷாட்களிலும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் அவரே அந்த இடத்தில் நின்று கொள்வார். கமல் சாரை பொறுத்தவரையில் அவர் நடிகர் என்பதைத் தாண்டி அவர் ஒரு டெக்னீசியன். ஒரு காட்சியை நடிகரிடம் சொல்வதற்கும் டெக்னீசியனிடம் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

Rajini and Kamal

நடிப்பு என்று வந்துவிட்டால் இருவரும் திரைத்துறை மேதைகள். ரஜினி சார் `மாநகரம்’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு என்னை அழைத்து வாழ்த்தினார். அந்த நாட்களிலெல்லாம் நான் அவரை வைத்து இயக்கப் போகிறேன் என யோசித்தது கிடையாது. `மாஸ்டர்’ திரைப்படம் நடக்கும் சமயத்திலிருந்து எந்த மாதிரியான திரைப்படம் பண்ணலாம் என ரஜினி சாருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ரஜினி சாரை இப்படியான வழிகளில் திரையில் காட்ட வேண்டும் எனத் திட்டங்கள் வைத்திருக்கிறேன்.

அடுத்தடுத்த படப்பிடிப்புகளுக்கு நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.” என்றவர், “`கூலி’ படத்தில் நாகர்ஜுனா சார், உபேந்திரா சார், செளபின் சார் எனப் பலரும் நடிக்கிறார்கள். எனக்கு இதுபோன்ற மல்டி ஸ்டாரர் படங்களை இயக்குவதற்கு எப்போதும் பிடிக்கும். சொல்லப்போனால், `மாநகரம்’ திரைப்படம்கூட ஒரு மல்டி ஸ்டாரர் படம்தான். நான்கு கதைகளில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கும்.” என்றார். மேலும், “சில நாட்களில் எனக்கு முன்பே ரஜினி சார் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார். 9 மணிக்குச் சரியாகப் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்றால் 7.30 மணிக்கே தளத்திற்கு வந்துவிடுவார். இதே போலத்தான் விஜய் அண்ணாவும் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிடுவார்.” என்றார்.

Lokesh Kanagaraj

இதன் பிறகு அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்துப் பேசியவர், “விமர்சனம் செய்வதும் ஒரு வேலைதான். எனக்கு விமர்சனங்கள் பிடிக்கும். ஒரு படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி தனிநபர் தாக்குதலாக விமர்சனங்கள் இல்லாத பட்சத்தில் அதனை நான் ஏற்றுக் கொள்வேன். விமர்சனம் என்பது இருந்தால்தான் பலவற்றை கற்றுக் கொண்டு அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து செல்ல முடியும்” என்ற அவர், “ஷங்கர் சார், மணி ரத்னம் சார், வெற்றி மாறன் சார், மிஷ்கின் சார் உட்படப் பலரும் நட்போடு பழகுவார்கள்.

நான், நெல்சன், அட்லீயெல்லாம் பரஸ்பரம் மச்சி, மாமா என அன்போடு அழைத்துக் கொள்வோம். இப்போது சமீபத்தில்கூட இயக்குநர் ராம் சாரின் பிறந்தநாள் விழாவில் 50 இயக்குநர்கள் கலந்து கொண்டனர். அந்த இரவு நாங்கள் அனைவரும் எங்களுடைய திரைப்படங்கள் தொடர்பாகப் பேசினோம். இப்போது ஒரு இயக்குநர் மற்றொரு இயக்குநரின் படம் நன்றாக இருக்கிறதென மற்றவர்களுக்குப் பரிந்துரைத்துப் பாராட்டுவது வெறும் பாராட்டு மட்டுமல்ல. ஒரு நல்ல படம் வந்திருக்கிறதென மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு கடமை. அப்படி என்னுடைய `மாநகரம்’ படத்தைப் பல இயக்குநர்களும் பாராட்டி மக்களுக்குப் பரிந்துரை செய்ததால்தான் நான் இங்கு இன்று இருக்கிறேன்.” எனக் கூறினார்.

LCU

இதுமட்டுமின்றி தன்னுடைய அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பாகவும் பேசினார் லோகேஷ். அவர், “`கூலி’ படத்திற்குப் பிறகு உடனடியாக `கைதி 2′ படத்தை எடுக்கவுள்ளேன். அதன் பிறகுத் தனியாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தை ஒரு படம் எடுக்க வேண்டும். அப்போதுதான் என்னால் `விக்ரம் -2′ படத்தை வைத்து இந்த யுனிவர்ஸை முடிக்க முடியும். இப்போது வரை இந்த திட்டத்தை வைத்திருக்கிறேன். என்னுடைய நடிகர்களின் தேதி கிடைக்கவில்லை என்றால் `கூலி’ படத்தைப் போல `ஸ்டாண்ட் அலோன் (Stand Alone)’ திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருப்பேன்.” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.