Samantha: 'இன்னும் இதுபோல செய்வது சரியல்ல; வாழு, வாழ விடு' – நடிகை சமந்தா கொடுத்த பதிலடி

நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

பல்லாவரம் டு பாலிவுட் வரையிலான அவரது திரைத்துறைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்ததில்லை. 22 வயதிலிருந்தே கடுமையான உழைப்பு, திறமை, பலப் போராட்டங்களை எதிர்கொண்டு இன்று திரைத்துறையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்த பிறகு நீண்ட நாள்களாக ஓய்வில் இருந்து, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  

Citadel: Honey Bunny

சமீபத்தில் பாலிவுட்டில் ‘சிட்டாடல் ஹனி பன்னி’ (Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இதற்கான புரமோஷன்கள் வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகை சமந்தா, இந்த வெப் சீரிஸில் ஆக்‌ஷன் பறக்கும் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து லைவ்வில் உரையாடினார். அதில், ரசிகர் ஒருவர் சமந்தாவை ‘கொஞ்சம் உடல் எடையை அதிகரிக்குமாறு’ கமெண்ட் செய்திருந்தார்.

அதற்குப் பதிலளித்த நடிகை சமந்தா, “எனது எடை குறித்து மற்றொரு கருத்து… நான் எனது எடையை குறித்த பல்வேறு கமெண்ட்களை சமீபத்தில் பார்த்து வருகிறேன்.உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். நான் ஒரு கடுமையான ‘strict anti-inflammatory diet’-ஐ பின்பற்றி வருகிறேன்.

இது எனது உடலுக்குத் தேவை. இதுதான் எனது உடலை அதிக எடையிலிருந்து தடுத்து, எனது உடல் நலனுக்கு ஏற்றவாறு சரியான அளவில் என்னை வைத்திருக்க உதவுகிறது. தயவுசெய்து மனிதர்களை உடலை வைத்து மதிப்பிடும் கண்ணோட்டத்தை நிறுத்துங்கள். 2024-க்கு வந்துவிட்டோம் நாம். இன்னும் இதுபோல செய்வது சரியல்ல. வாழு, வாழ விடு.. என்பதைப்போல வாழுவோம் (Live and Let Live)” என்று கூறியிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.