ஸ்ரீநகர் பாஜகவினரின் அமளியால் ஜம்மு காஷ்மீர் சட்டசபை கூட்டத்தொடர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தொடங்கியது. தொடர் தொடங்கியதும் தேசிய மாநாட்டு கட்சியின் மூத்த தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான அப்துல் ரஹீம், சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். நேற்று மக்கள் ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. வஹீத் பாரா, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் […]
