மெல்போர்ன்,
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது.தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்நிலையில், பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
5 போட்டிகளில் இந்தியா ஏதாவது ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெறும் . ஆஸ்திரேலிய அணி சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த அணியாக உள்ளது சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த்துவது மிக கடினம். ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்