மேல் மாகாணத்திற்கு அப்பால் வெளி மாகாணங்களில் வசிக்கும் பொருளாதார நெருக்கடியில் உள்ள கிராமப்புற முஸ்லிம்களுக்கும் புனித ஹஜ் யாத்திரையை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை வழங்குமாறு ஹஜ் கோட்டாவைப் பெற்ற நிறுவனங்களுக்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது என்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தற்போதுள்ள ஹஜ் குழுவின் ஊடாக 88 நிறுவனங்களுக்கு 3500 ஹஜ் கோட்டாக்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் ஹஜ் யாத்திரைக்கு ஆட்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ள 88 நிறுவனங்களும் மதிப்பெண் முறையொன்றினூடாகவே தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிகட்காட்டினார்.
அதன்படி சொத்துக்களை வைத்துள்ள வசதிவாய்ப்புக்கள்; உள்ளவர்களை மாத்திரம் ஹஜ் யாத்திரைக்கு உட்படுத்துவதைத்; தவிர்த்து, அவர்களுக்கும் அந்த சந்தர்ப்பத்தை வழங்குவதுடன், பொருளாதாரத்தில் சிரமம் உள்ளவர்களுக்கும், குறிப்பாக இலங்கையின் மேல் மாகாணத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களில் வசிக்கும் இஸ்லாமிய பக்தர்களுக்கும் ஹஜ் யாத்தரைக்கு செல்வதற்கான வாய்ப்பை வழங்குமாறு குறித்த நிறுவனங்களிடம் அரசாங்கம் கோhரிக்கை விடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் நியாயமான விநியோக முறையில் இந்த 3500 கோட்டாவையும் வழங்க அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.