மாதம் 333 ரூபாயில்… தினம் 2.5 GB டேட்டா உடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்… அசத்தும் ஏர்டெல்

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் கட்டணத்தை உயர்த்தி பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், வாடிக்கையாளர்கள் பலர், மலிவான கட்டணங்கள் தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி படை எடுக்க, அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, தற்போது பல வகையான புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல்லும் மலிவான சில திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. 

அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data)

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு  ஆண்டு முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையோடு மட்டுமல்லாமல், வர்மபற்ற வாய்ஸ் கால்கள், தினம் 2.5 ஜிபி டேட்டா ஓடிடி சந்தாவும் ஆகியவற்றை கொடுக்கும் மலிவான திட்டம் ஒன்றை அந்நிறுவனம் (Airtel Prepaid Plans) அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், இணைய டேட்டா , அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் , ஓடிடி  இலவச சந்தா மற்றும் எஸ்எம்எஸ் போன்ற அனைத்தையும் பெறாலாம்.

ஏர்டெல் வருடாந்திர ரீசார்ஜ் திட்டம் (Airtel Yearly Recharge Plan)

ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தின் கட்டணம் ரூ.3999. அதாவது மாதம் வெறும் ரூ.333 கட்டணத்தில் கிடைக்கும் திட்டம்.  இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை அனுபவிக்கலாம். ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் வாடிக்கையாளர்கள் அதி வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம். இது தவிர நாளொன்றுக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டாவும் கிடைக்கும்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இலவசசந்தா (Disney+ Hotstar) 

வரம்பற்ற 5ஜி டேட்டா இலவசமாக கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற சிறந்த திட்டமாக உள்ளது. இதற்கு ஏற்ப டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவை வருடம் முழுவதும் இலவசமாக பயன்படுத்தலாம். இந்த ஓடிடி சந்தாவின் மதிப்பு ரூ.499ஆக இருக்கிறது.

தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் பயனர்களுக்கு பல சிறந்த திட்டங்களை வழங்கி (Airtel Prepaid Plans) வருகிறது. அதே நேரத்தில், நீங்கள் இலவச OTT சேனல் அணுகலையும் விரும்பும் ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புபவர்களுக்கு, ஏர்டெல் சிறந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.