‘வாஜ்பாய் போட்ட பாதையில் சென்றிருந்தால் நமக்கு எந்த பிரச்னையுமே இருந்திருக்காது’ என ஜம்மு காஷ்மீர் – பாகிஸ்தான் உறவு குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா சட்டமன்றத்தில் பேசியுள்ளார்.
இரண்டாவது நாளாக நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில், “வாஜ்பாய் போட்ட பாதையில் சென்றிருந்தால், நாம் இப்போது உள்ள நிலையில் இருந்திருக்க மாட்டோம். அவர் இல்லாததால், நம் பாதையை நாம் இழந்துவிட்டோம்.
வாஜ்பாய் ஜம்மு காஷ்மீர் பிரச்னைகளை புரிந்துகொண்டு லாகூருக்கு பேருந்து வசதி, பின்னர் – இ – பாகிஸ்தானுக்கு அவரே சென்றது என பல முன்னெடுப்புகளை செய்துள்ளார்.
எல்லையில் நண்பர்களை வேண்டுமானால் மாற்றிக்கொள்ளலாம். ஆனால், அண்டை நாட்டை மாற்ற முடியாது என்பதை சரியாக பின்பற்றினார். என்னதான் பிரச்னைகள் இருந்தாலும், அவர் எப்போதும் பாகிஸ்தானுடன் நட்பு கரத்தை நீட்டினார்.
நான் அவருடன் அமைச்சராக பணியாற்றி உள்ளேன். அவர் எப்போதுமே ஜம்மு காஷ்மீரில் உள்ள நிலைமை சீராக்கும் முயற்சியிலேயே இருப்பார். எப்போது ஜம்மு காஷ்மீரில் நிலைமை மோசமடைந்தாலும், பேச்சுவார்த்தை தான் நல்ல வழி என்ற முன்னெடுப்பை எடுப்பார்.
அவர் இரு நாட்டு மக்களையும் இணைப்பதற்காக எல்லைகளில் சாலைகளை திறந்தார். ஆனால், அது தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் இரு நாட்டினரையும் பிரிக்கும் வேலைகளும் தற்போது நடந்து வருகிறது.
வாஜ்பாய் கட்டிய இந்த நட்பு பாலம் நாம் அமைதியை நோக்கி செல்வதற்கான உத்வேகமாக அமைய வேண்டும்” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா பேசியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb