அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில் 538 வாக்காளர்கள் குழு உள்ளது. அதிபர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு 270 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 277 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் அதிபராகி உள்ளார். கமலா ஹாரிஸ் 224 வாக்காளர்கள் குழு உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
ட்ரம்ப் வெற்றி பெற்ற மாகாணங்கள்: அலபாமா, ஆர்கன்சாஸ், புளோரிடா , ஜார்ஜியா, ஐடாஹோ, இண்டியானா, அயோவா , கன்சாஸ், கென்டக்கி, லூசியானா, மிசூரி, மொன்டானா, நெப்ராஸ்கா, வட கரோலினா, வடக்கு டகோட்டா, ஓஹியோ , ஓக்லஹோமா, பென்சில்வேனியா, தென் கரோலினா, தெற்கு டகோட்டா, டென்னசி, டெக்சாஸ், உட்டா, மேற்கு வர்ஜீனியா, வயோமிங்.
கமலா ஹாரிஸ் வெற்றிபெற்ற மாகாணங்கள்:கலிபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட்,டெலவேர், கொலம்பியா மாவட்டம், ஹவாய், இல்லினாய்ஸ், மேரிலாந்து, மாசசூசெட்ஸ், மினசோட்டா, நியூயார்க், நியூ மெக்ஸிகோ, ஒரேகான், ரோட் தீவு, வெர்மான்ட், வர்ஜீனியா, வாஷிங்டன், மைனே, மிச்சிகன், நியூ ஹாம்ப்ஷயர், நியூ ஜெர்சி.