கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல்

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்டு டிரம்ப் (வயது 78) அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்க உள்ளார். அதற்கான வேலைப்பாடுகள் வெள்ளை மாளிகையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

இந்தநிலையில், அமெரிக்கா ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.

குழந்தைகள் தானியங்கி குடியுரிமையை பெற குறைந்தபட்சம் பெற்றோர்களில் ஒருவர் அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என்பது டிரம்பின் நிலைப்பாடு ஆகும். டிரம்ப் பொறுப்பேற்ற பின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டால் கிரீன் கார்டு பெற விரும்பும் 10 லட்சம் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது டிரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்கும் முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஜனதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றபின் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று அமெரிக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.