கேஎல் ராகுல் கதை முடிந்தது! இனி இந்திய அணியில் வாய்ப்பு இல்லை – ஏன் தெரியுமா?

KL Rahul News Tamil | இந்திய அணியில் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கேஎல் ராகுல், மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார். பயிற்சியாளர் கம்பீர் ஆசியால் மீண்டும் இந்திய அணிக்குள் வந்தாலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியோடு அணியில் இருந்து நீக்கப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஆடவில்லை. கேஎல் ராகுல் பேட்டிங் அப்போட்டியில் சிறப்பாக இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கவும் வாய்ப்பு இருந்தது. ஆனால் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி மிகவும் எளிதான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

அதனால், ராகுல் பேட்டிங் மீது கடுப்பான கேப்டன் ரோகித் சர்மா அடுத்த போட்டியிலேயே அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கிவிட்டார். வாய்ப்புகளை அவர் வீண்டிப்பதால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ராகுலை கேப்டன் ரோகித் சேர்க்காமல் இருந்து வருகிறார். அவருக்கு பதிலாக ரிஷப் பந்துக்கு அணியில் அதிக முக்கியத்துவமும் கொடுத்து வருகிறார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர், கேஎல் ராகுல் ஆகிய மூன்று பேர் இடையே ஒரு பனிப்போர் ஓடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் கம்பீர், இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கும் கவாஸ்கர் பார்டர் டிராபி தொடருக்கான இந்திய அணியில் ராகுல் பெயரை சேர்த்திருக்கிறார்.

அத்துடன் ராகுலை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி அங்கு இப்போது ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி ஆடும் போட்டியில் விளையாடுமாறு அறிவுறுத்தினார். அதன்படி, நியூசிலாந்து தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியா சென்றுவிட்டார் கேஎல் ராகுல். அங்கு இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணியுடன் இணைந்த ராகுல், ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் இறங்கினார். ஆனால் 4 பந்துகள் மட்டுமே ஆடிய அவர் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு போலந்து பந்துவீச்சில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். இதனால் அவருடைய மோசமான பார்ம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அத்துடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு துருப்புச்சீட்டாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றாலும் அதனை மீண்டும் ஒருமுறை தவறவிட்டிருக்கிறார் கேஎல் ராகுல். இதனால், அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது என்பது கிட்டதட்ட மங்கிவிட்டது என்றே சொல்லலாம். வாய்ப்புகளை வீணடித்து அவரே தன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கும் கொண்டு வந்து கொண்டிருக்கிறார் கேஎல் ராகுல்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.