மதுரை: சாதாரண மழைக்கே சாலைகள் சேதம் அடைந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக அரசை கண்டித்து, வரும் 16ந்தேதி மதுரையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், மதுரை மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்ட குடிநீர்த் திட்டங்களை முடக்குவதைக் கண்டித்தும்; மதுரை மாவட்டம் முழுவதும் சேதமடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீர்படுத்திடவும், பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்தும், வண்டல் மண் […]