‘தெலுங்கு சமூகத்தினர் பெருமைப்படும் தருணம்’: உஷா வான்ஸ் குறித்து சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமராவதி: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, இதன் மூலம் தெலுங்கு பாரம்பரியம் கொண்ட உஷா சிலுகுரி வான்ஸை அமெரிக்காவின் இரண்டாவது பெண்ணாக மாற்றியுள்ள வரலாற்றுத் தருணம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சந்திரபாபு வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸுக்கு எனது வாழ்த்துகளைகத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த வெற்றி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்றுத் தருணத்துக்கு வழிவகுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வான்ஸ் – உஷா வான்ஸை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸின் மனைவி உஷா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர்கள். அவரது சொந்த கிராமமான வத்லுரு, மிகவும் பிரசித்தி பெற்ற கோதாவரி நகரமான தனுகு, மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான பீமாவரத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டொனால்ட் ட்ரம்ப்க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையில், இரண்டு நாடுகளும் அதிக ஒத்துழைப்பை வளர்க்கும் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.