பாண்டுரங்க விட்டலேஸ்வரர் திருக்கோயில், விட்டலாபுரம், திருநெல்வேலி மாவட்டம். 16ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் தமிழகப் பிரதிநிதியாக விட்டலராயன் என்ற விட்டல தேவன் ஆட்சி செய்தார். இவருக்கு பண்டரிபுரம் பாண்டுரங்கன் மீது அதிக ஈடுபாடு இருந்தது. இவரது கனவில் பாண்டுரங்கன் தோன்றி “வடக்கில் இருப்பது போல தென்னகத்தில் உனது இருப்பிடத்திலும் அருள்பாலிக்க உள்ளேன். எனவே தாமிரபரணி ஆற்றில் புதைந்து கிடக்கும் எனது விக்ரகத்தை எடுத்து கோயில் கட்டி வழிபடு” எனக் கூறி மறைந்தார். பாண்டுரங்கன் கூறியது போலவே ஆற்றிலிருந்து விக்ரகம் எடுக்கப்பட்டது. […]