பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ல் பார்வையாளர்களால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் பிரதீப் ஆண்டனி. ரெட் கார்டு கொடுத்து அவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றியதற்கு அவருடைய ரசிகர்கள் பலர் கடும் கண்டனங்களை அப்போது சமூகவலைத்தளப் பக்கங்கள் வாயிலாகப் பகிர்ந்து வந்தனர். `அருவி’, `வாழ்’ போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார். இவரும் நடிகர் கவினும் நெருங்கிய நண்பர்கள்.
தனக்கும் பூஜா சக்தி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கடந்த ஜூன் மாதம் தனது ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார் பிரதீப். கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து பிரதீப் பூஜாவை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (நவம்பர் 7) இவர்களுடைய திருமணம் கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களுடைய திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமண நிகழ்வில் பிக்பாஸ் போட்டியாளர் சுரேஷ் சக்கரவர்த்தியும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்.
இந்த திருமண நிகழ்வில் நண்பர்கள், உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர். பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லாமலேயே பார்வையாளர்களால் கொண்டாடப்பட்ட நபர் பிரதீப். அவருடைய வாழ்க்கையில் அடுத்த பயணத்தைத் தொடங்கியதற்கு அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் பிரதீப் – பூஜா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…