பெங்களூரு,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின.
இந்த போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் அபாரமாக செயல்பட்டனர். இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த தொடரில் நாளை 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதில் மாலை 5 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி – மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – முகமதின் எஸ்.சி அணிகள் மோத உள்ளன.