பருவநிலை மாற்றம்: சவூதி அரேபியாவில் கொட்டிய பனிப்பொழிவு – வைரலாகும் வீடியோ

ரியாத்,

ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் குளிர் நிலவும் சூழலில், அரபு நாடுகளில் வெப்பம் மற்ற நாடுகளை காட்டிலும் பொதுவாக அதிகரித்து காணப்படும். சுட்டெரிக்கும் வெயில் கொண்ட சவுதி அரேபியாவில் இரவு நேரங்களில் கடும் குளிர் வீசினாலும், இதுவரை பனிப்பொழிவு என்பது அந்த நாட்டு வரலாற்றில் நிகழ்ந்ததே கிடையாது. ஆனால், சவுதி அரேபியா வரலாற்றில் முதன்முறையாக பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது.

எப்போதும் வறண்ட வானிலையே நிலவும் இந்த பாலைவன பகுதியில் முதல்முறையாக பனிப் பொழிந்துள்ளது. இந்த பிராந்தியத்தில் பனிப்பொழிவு இதுவே முதல்முறை என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். கடந்த சில காலமாகவே இந்த பிராந்தியத்தில் வானிலை மொத்தமாக மாறி வருகிறது. கடுமையான புயல் மற்றும் ஆலங்கட்டி மழை ஏற்கனவே அங்குப் பெய்த நிலையில், இப்போது முதல்முறையாகப் பனிப்பொழிவும் நடந்துள்ளது.

பனிப்பொழிவு குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இது தொடர்பான போட்டோ மற்றும் வீடியோவும் டிரெண்டாகி வருகிறது. அரேபிய கடலில் இருந்து உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமே இந்த திடீர் வானிலை மாற்றத்திற்குக் காரணமாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ஈரப்பதம் நிறைந்த காற்றை வறண்ட பகுதிக்குள் கொண்டு வந்துள்ளது இதன் காரணமாகவே கனமழையும் பனிப்பொழிவும் ஏற்பட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களிலும் கனமழை இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சவுதி வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

உலகின் சுற்றுச்சூழல் என்பது கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் மாறி வரும் நிலையில், பருவமழையும் பருவம் தவறி பெய்து வரும் நிலையிலும் சவுதி அரேபியாவில் பனிப்பொழி பொழிந்தது பெரும் அதிர்ச்சியை சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது . உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் பல நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் தொழிற்சாலை கழிவுகள், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் போர்கள், தொழில்நுட்ப வளரச்சி கால சூழலில் பெரும் தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.