மத்திய பிரதேச மாநிலத்தின் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் மந்த்ராலயாவில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மேம்பாடு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் சமூக வளர்ச்சிக்கு வித்திடவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் துணை முதல்வர் ராஜேந்திர சுக்லா,
“மத்திய பிரதேச அரசு வேலைவாய்ப்பில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதை 35 சதவீதமாக உயர்த்த அமைச்சரவைகூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் அனைத்து ஆள்சேர்ப்புகளுக்கும் மேம்படுத்தப்பட்ட மகளிர் ஒதுக்கீடு பொருந்தும்.
செப்டம்பர் 13, 2023 அன்று மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் பெண்களுக்கான இடஒதுக்கீடு மேம்பாடு குறித்த அறிவிப்பை மத்தியப் பிரதேச சிவில் சர்வீசஸ் (பெண்கள் நியமனத்திற்கான சிறப்பு விதிகள்) 1997-ன் கீழ் வெளியிட்டிருந்தார். அமைச்சரவையின் தற்போதைய முடிவு அந்த அறிவிப்பை உறுதிசெய்து ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்த உள்ளது.
கூடுதலாக, மாநிலத்தின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
விவசாயிகள் எளிதில் பயன்பெறும் வகையில், 2024-2025 காரிஃப் மற்றும் ராபி பருவங்களுக்கு ஏற்ற 254 புதிய உர விற்பனை மையங்களை நிறுவுதல் குறித்த நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வயது வரம்பை 40லிருந்து 50 ஆக உயர்த்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
660 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் சார்னியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், 830 மெகாவாட் திறன் கொண்ட பழைய மின் உற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக ஆற்றல் தேவைகளை வழங்கும்.
இவை மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பிரதேச மாநில அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்களாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb