விரைவில் வருகிறது BSNL 5G சேவை… நாடு முழுவதும் 1876 5ஜி டவர்கள் நிறுவ நடவடிக்கை

BSNL 5G Service: தொலைத் தொடர்புத்துறையில் தனியார் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் அதற்கு கடும் போட்டியை கொடுக்கும் விதிமாக தனது 5G நெட்வொர்க்கை விரைவில் தொடங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் தொடங்குவற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் 5ஜி டவர்களை நிறுவி வருகிறது. இப்போது விரைவில் அதிவேக இணையத்தை அனுபவிக்க முடியும்.

நாடு முழுவதும் 1876 புதிய டவர்கள் நிறுவ நடவடிக்கை

BSNL நிறுவனம் சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய பெருநகரங்களில் தனது 5G சேவைகளை விரைந்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக நாடு முழுவதும் 1876 புதிய டவர்களை BSNL நிறுவனம் நிறுவவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த டவர்களை நிறுவுவதற்கான டெண்டர்களை, விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 22ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம். இதன் மூலம் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு மிக வேகமாக இணையத்தை வழங்கலாம்.

BSNL 5G சேவையை முதலில் பெறும் நகரம் எது? 

டெல்லியில் 5ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக மின்டோ சாலை, சாணக்யபுரி, கன்னாட் பிளேஸ் போன்ற பகுதிகளில் இந்த சேவை தொடங்கப்படும். அடுத்த ஆண்டு மகர சங்கராந்தியை ஒட்டி இந்த சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது. பிஎஸ்என்எல், பிற நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி வசதியை வழங்கும். சேவையில் இரண்டு வகையான வழங்குநர்கள் இருப்பார்கள்: முதன்மை 5G சேவை வழங்குநர் மற்றும் இரண்டாம் நிலை 5GaaS வழங்குநர்.

அதிவேக இணைய அனுபவம்

BSNL தனது 5G சேவையை தொடங்குவதன் மூலம், தொடக்கத்தில் 100,000 வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த நெட்வொர்க் மூலம் அதிவேக இணையத்தை பெறலாம். வீடியோ அழைப்புகளை விரைவாக மேற்கொள்ளலாம். அதன் தரமும் சிறப்பாக இருக்கும். மிக வேகமாக, வீடியோ, புகைப்படம், ஆடியோ, கோப்புகள் உள்ள பல்வேறு தரவுகளை பதிவிறக்கலாம் மற்றும் பதிவேற்றலாம். இந்த நெட்வொர்க் மிக வேகமாக இயங்கக்கூடிய  3.5 GHz பேண்டில் வேலை செய்யும்.

இரண்டு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) மற்றும் ஐடிஐ லிமிடெட் ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி நெட்வொர்க்கை விரைவாக அறிமுகப்படுத்துகிறது. இந்தப் பணிக்காக சுமார் ரூ.19,000 கோடி செலவிடப்படும். மேலும், BSNL  தனது பழைய 4G டவர்களை  5G டவர்களாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் 5ஜி நெட்வொர்க் விரைவில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வு

தனியார் நிறுவனங்கள் தங்கள் போஸ்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களின் விலைகளை சமீபத்தில் அதிகரித்த நிலையில், மலிவான கட்டணத்தில், அதிவேக இணையத்தை பெற விரும்புபவர்களுக்கு, BSNL 5G சேவை சிறந்த தேர்வாக இருக்கும். BSNL ஏற்கனவே பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. எனவே, பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவைக்கான கட்டணும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.