சென்னை மாநகராட்சி பொறியாளருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ₹10,000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இளநிலை பொறியாளர் விஸ்வநாதன் மீதான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் வார்டு 182-க்கு உட்பட்ட திருவான்மியூர் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வழங்கிய இடத்தில் அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடம் தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய விஸ்வநாதன் […]