Aval Awards: “என் வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம்..!" – `எவர்கிரீன் நாயகி' சிம்ரன்

தமிழ் சினிமாவில் `கனவுக் கன்னி’, `நம்பர் 1 ஹீரோயின்’ பட்டம் பெற்றவர்கள் உண்டு. இவற்றுடன் ஆக்டிங் க்வீன், டான்ஸ் க்வீன், ஆக்‌ஷன் க்வீன் என எல்லா பட்டங்களையும் வாரியெடுத்துக் கொண்டது. இந்தி உள்ளிட்ட சில மொழிப் படங்களில் அறிமுகமானவருக்கு தமிழ்நாடு கொடுத்தது சிவப்புக் கம்பள வரவேற்பு. 1997-ம் ஆண்டு `வி.ஐ.பி’, ‘நேருக்கு நேர்’ என்று திரையில் தோன்றியவர் இரண்டே ஆண்டுகளில் உச்சத்துக்குச் சென்றார்.

`எவர்கிரீன் நாயகி’ சிம்ரன் – அவள் விருதுகள்

கமல், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின் ஆனார். `பார்த்தேன் ரசித்தேன்’ படத்தில் வில்லியாக மிரட்டியது… மாஸ். `கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் ஸோ ஸ்வீட் அம்மா, `கோவில்பட்டி வீரலட்சுமி’யில் ஆக்‌ஷன் அவதாரம் என சிம்ரனின் திரைவிருந்து வெரைட்டியானது. ‘தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா’, ‘ஆல்தோட்ட பூபதி நானடா’, `தகதகதகதகவென ஆடவா’ என சிங்கிள் சாங்ஸில் தோன்றியவரின் டான்ஸ்… பக்கா வைப். `பேட்ட’, `ராக்கெட்ரி’, ‘அந்தகன்’ என இரண் டாவது இன்னிங்ஸிலும் அசத்தி வருபவர் பல மொழி களிலும் 90-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் டார்லிங்காக இருக்கும் இந்த தேவதைக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் வசந்த் ஆகியோர், அவள் விகடனின் `எவர்கிரீன் நாயகி’ விருது வழங்கினர். விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சிம்ரன், “எவர் கீரின் நாயகி விருதைக் கொடுத்த விகடனுக்கு என் நன்றிகள். 2025-ம் ஆண்டு விகடன் நூற்றாண்டைக் காணவிருக்கிறது. அதற்கு என் வாழ்த்துகள். என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நான் நிறைய சாவல்களை எதிர்கொண்டிருக்கிறேன். நம் வாழ்வில் சவால்கள் வந்துகொண்டேதான் இருக்கும். அதுதான் வாழ்க்கை.

`எவர்கிரீன் நாயகி’ சிம்ரன் – அவள் விருதுகள்

அந்தச் சவால்களை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. எந்தத் தருணத்திலும் தைரியத்தை, மன உறுதியை மட்டும் விட்டுவிடக் கூடாது. அதுதான் நான் என் வாழ்வில் கற்றுக் கொண்ட பாடம். பெண்களை மையப்படுத்திய வலிமையான, நல்ல கதாபாத்திரத்தை, கதையை எனக்காக எழுத வேண்டும் என்று எல்லா இயக்குநர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன். அப்படியான கதையைக் கொண்டுவந்தால் நிச்சயம் மீண்டும் தொடர்ந்து நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.