சென்னை: அரசுக் கல்லூரிகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி ஏற்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி […]