சர்பராஸ்கானும் இல்லை! கேஎல் ராகுலும் இல்லை! ஆஸ்திரேலியா தொடரில் இவருக்கு தான் வாய்ப்பு!

இந்தியா A அணிக்கும், ஆஸ்திரேலியா A அணிக்கும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா A அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் இந்தியா A 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் 229 ரன்கள் அடித்தது. 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலியா A அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய A அணியின் பேட்டர்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், இந்தியா ஏ அணிக்காக துருவ் ஜூரல் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்போர்னில் உள்ள MCG மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், இந்திய A பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களின் வேகத்தையும் பவுன்ஸையும் சமாளிக்க முடியாமல் அவுட் ஆகி வெளியேறினர். ஆனால் துருவ் ஜூரல் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை அடித்தார். முதல் இன்னிங்ஸில் 80 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 68 ரன்களும் அடித்து அசத்தி இருந்தார். இவரது ரன்களால் இந்தியா A அணி மிகவும் மோசமான தோல்வியை தவிர்த்தது. சமீபத்தில் நியூசிலாந்து தொடரை இழந்த இந்திய அணியில் மிடில் ஆர்டர் தான் பெரும் கவலைக்குரியதாக இருந்தது. இதனால் ஜூரல் பெர்த்தில் நடைபெறும் டெஸ்டில் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DHRUV JUREL, THE WARRIOR…!!! 

1st innings – 80 (186) when India 11/4.

2nd innings – 68 (122) when India 56/5.

UNBELIEVABLE TEMPERAMENT FOR SOMEONE PLAYING FIRST TIME IN AUSTRALIA, TAKE A BOW JUREL…!!!! pic.twitter.com/3B8cYb1n49

— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 9, 2024

இந்திய பேட்டிங் வரிசையில் 6வது இடத்தில் இதற்கு முன்பு ஜூரல் விளையாடினார். ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படும் நிலையில், ஜூரல் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. KL ராகுல் மற்றும் சர்ஃபராஸ் கான் மிடில் ஆர்டரில் சொதப்பி வரும் நிலையில், இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். மேலும் வெளிநாடுகளில் சர்ஃபராஸ் கான் இதுவரை விளையாடிய அனுபவம் இல்லை. மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியா A அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 11-4 என்ற இக்கட்டான நிலையில் இருந்த போது களமிறங்கினார்  ஜூரல். அந்த சமயத்தில் நிதானமாக விளையாடி தனது பேட்டிங் திறமையை நிரூபித்தார். மேலும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

மேலும் இரண்டாவது இன்னிங்ஸிலும், இந்தியா A 44-4 என்று நிலையில் இருந்த போது மீண்டும் சிறப்பாக செயல்பட்டார். நிதிஷ் குமார் ரெட்டியுடன் சிறப்பான பாட்னர்ஷிப் மேற்கொண்டு இந்தியாவை 229 ரன்களுக்கு அழைத்துச் சென்றார். துருவ் ஜூரல் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். மேலும் ராஞ்சியில் தொடரிலும் நன்றாக விளையாடி வருகிறார். நியூசிலாந்து தொடரின் போது ரிஷப் பந்த் காயம் அடைந்த போது, தற்காலிக விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.