புனே: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
“மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மசூதிகளில் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளையும் அகற்ற வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை. கோயில்களில் ஆண்டு முழுவதும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். ஆனால், கோயில்களில் எல்லா நேரமும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை.
கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில நிமிடத்தில் இறைவனின் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு வெளிவந்து விடுகின்றனர். பாலாசாஹேப் தாக்கரேவின் மகன் முதல்வராக இருந்த போதும் நான் ஒலிபெருக்கிகளை எதிர்த்தேன். எங்கள் கட்சியை சேர்ந்த சுமார் 17,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மசூதிகளுக்கு முன்பாக அனுமன் சாலிசாவை பாடுவோம் என்று நான் சொல்லி இருந்தேன்” என மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
அவரது கட்சி அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் 135 தொகுதிகளில் போட்டியிடுகிறது. வரும் 20-ம் தேதி அங்கு ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.