‘அமரன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜி. வி பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் பரிசு ஒன்றை அளித்திருக்கிறார். அதனை ஜி. வி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சிம்பு, அனிருத் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பாராட்டி இருந்தனர். மக்களிடமும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
குறிப்பாக ‘ஹே மின்னலே’ பாடல் யூடியூபில் 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்திருக்கிறது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஜி.வி பிரகாஷிற்கு வாட்ச் ஒன்றைப் பரிசளித்திருக்கிறார்.
Thanks @Siva_Kartikeyan for the sweet gift for #Amaran success ❤️✨ pic.twitter.com/HhnxCxI6w1
— G.V.Prakash Kumar (@gvprakash) November 9, 2024
இதனை ஜி.வி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அந்தப் பதிவில், ” அமரன் வெற்றிக்கு இனிய பரிசு கொடுத்ததற்கு நன்றி சிவகார்த்திகேயன்” நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…