Basics of Share Market 24: 'ஃபண்டுகள், அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்வோம்… வாங்க!'

மியூச்சுவல் ஃபண்டுக்கு வந்துவிட்டால், ஃபண்ட் என்ற வார்த்தை இல்லாமல் இருக்காது. ஃபண்ட் என்றால் என்ன என்பதை எளிதாக கூறவேண்டுமானால், அதுவும் ஒரு வகையான பங்கு என்று எடுத்துகொள்ளலாம். இந்த ஃபண்டுகளின் வகைகளை பார்க்கலாம். வாங்க…

இக்விட்டி ஃபண்ட் – நிறுவனத்தின் பங்குகள் இக்விட்டி ஃபண்ட் என்று கூறுப்படுகிறது. இதில் அதிக லாபம் பெறலாம். அதற்கேற்ப ரிஸ்க்கும் மிக அதிகம்.

மியூச்சுவல் ஃபண்டுகளும், அதன் வகைகளும்…

கடன் ஃபண்ட் – அரசு பாண்டுகள், கார்ப்பரேட் பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்வது கடன் ஃபண்ட். இதில் லாபமும், ரிஸ்க்கும் குறைவு. குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றது இது. பாண்ட் பற்றி எளிதாக கூறவேண்டுமானால், அரசு ஒரு சாலை அமைக்கிறது என்று வைத்துகொள்வோம். அதற்கு பணம் வேண்டுமல்லவா, அதற்காக அரசு பாண்டுகள் வெளியிடும். அந்தப் பாண்டை வாங்க நாம் கொடுக்கும் பணத்தை சாலை அமைக்க பயன்படுத்தி கொள்ளும். நம் தொகைக்கான வட்டியை நமக்கு அரசு வழங்கிவிடும். கிட்டதட்ட இதே மாதிரி தான் அனைத்து கடன் ஃபண்டுகளும் இயங்கும்.

ஹைப்ரிட் ஃபண்ட் – மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் சந்தைப் போக்கைப் பொறுத்து நாம் கொடுக்கும் தொகையை இக்விட்டி ஃபண்ட், கடன் ஃபண்ட், கோல்டு ஃபண்ட் என பிரித்து முதலீடு செய்வதாகும். இப்படி முதலீடு செய்யும்போது நமது முழுத் தொகையும் ஒரே இடத்தில் மாட்டிக்கொள்ளாது. அதனால் ரிஸ்க் குறைவு.

இன்னும் இதிலேயே வகைகள், கிளை வகைகள் என ஏகப்பட்ட வகைகள் உள்ளன. ஆனால், முக்கியமாக இந்தப் பங்குகளை பற்றி தெரிந்துகொண்டால் போதுமானது.

திங்கட்கிழமை: CAGR கணக்கிடுவது எப்படி தெரியுமா?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.