இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக இருப்பவர் வீராட் கோலி. டி20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற இவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த மாத இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடத் தயாராகி வருகிறார்.
கிரிக்கெட்டை தாண்டி, தன்னுடைய மனைவி, குழந்தைகள் எனக் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை விரும்புவார். இந்நிலையில், நேற்று (நவம்பர் 8) விராட் கோலியும், அவரின் மனைவி அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் அவரது நண்பரின் அழைப்பை ஏற்று ஒரு ப்ரோமோஷன் விழாவிற்காகச் சென்றுள்ளார்.
The way she held #ViratKohli for a picture is scary but he still handled it with such grace & class!! pic.twitter.com/O8iboRGMQa
— Mohammad V (@Mohamma68749612) November 9, 2024
அங்கு விராட் கோலியின் வருகைக்காக அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர். அங்கு நின்றுகொண்டிருந்த விராட் கோலியின் பெண் ரசிகை ஒருவர் கோலியுடன் செல்ஃபி எடுத்தே தீரவேண்டும் எனப் பிடிவாதமாக இருந்திருப்பார் போல. விராட் கோலி வந்தவுடன், அவரைப் பின்தொடர்ந்து, ‘ஒரே ஒரு போட்டோ…” எனக் கேட்கிறார். அவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்து நிற்கிறார். அந்த நேரம் அந்தப் பெண்ணின் செல்போன் கேமரா வேலை செய்யவில்லை. அப்போது விராட் கோலி புறப்படத் தயாராகும்போது, அவருடைய கையைப் பிடித்து ஒரே ஒரு போட்டோ என அங்கிருந்த ஒருவரிடம் செல்போனை கொடுத்து போட்டோ எடுத்துக்கொள்கிறார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளிக்குப் பலரும் கமெண்ட் செய்துவருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…