இஷான் கிஷனுக்கு பதில் இந்த சிஎஸ்கே வீரரை டார்கெட் செய்யும் மும்பை அணி!

ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த ஆண்டு ஏலம் நடைபெறுகிறது. 10 அணிகளும் வீரர்கள் தக்கவைப்பு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் மூன்று முதல் ஐந்து வீரர்களை தக்க வைத்துள்ள நிலையில் பஞ்சாப் அணி இரண்டு அண்ட் கேப்ட் வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் முக்கிய வீரர்களை ஏலத்தில் விடாமல் தக்கவைத்துள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முக்கிய வீரர்களை தக்க வைத்துள்ளது. முதல் வீரராக பும்ராவை 18 கோடிக்கு தக்க வைத்துள்ளது. சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியாவை 16.35 கோடிக்கு தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு முதலே மும்பை அணி நிர்வாகத்திற்கும், ரோஹித் சர்மாவுக்கு இடையே பிரச்சனை நிலவி வந்தது.

எனவே இந்த ஆண்டு ரோகித் சர்மா மும்பை அணியில் இருந்து விலகி, வேறு அணிக்காக விளையாட உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால் மும்பை அணி ரோஹித் சர்மாவை 16.30 கோடிக்கு தக்க வைத்துள்ளது. இவர்களை தவிர திலக் வர்மாவை 8 கோடிக்கு தக்க வைத்துள்ளனர். மொத்தம் ஐந்து வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்திற்கு முன்பு தக்க வைத்துள்ளது. இதனால் தற்போது மும்பை அணியிடம் 45 கோடி மீதமுள்ளது. இந்த தொகையில் தான் மீதமுள்ள 18 வீரர்களையும் வாங்க வேண்டும். மும்பை இந்தியன்ஸ் எப்போது பெரிய வீரர்களை ஏலத்தில் குறி வைக்கும். ஆனால் இந்த முறை அவ்வாறு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ஜாஸ் பட்லர், அஸ்வின் போன்ற வீரர்கள் எழுத்தில் இருந்தாலும் மும்பை அணியால் அவர்களை ஏலத்தில் எடுப்பது சற்று சிரமத்தில் உள்ளது.

கடந்த சீசனில் மும்பை அணி அவர்களது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிசானை 16 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.  ஆனால் இந்த முறை அவரை பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்க முடியாததால் இளம்வீரரை அணியில எடுக்க முடிவு செய்துள்ளது. தற்போது மும்பை அணிக்கு பேட்டிங் பலம் இருப்பதால் விக்கெட் கீப்பிங் மற்றும் பௌலிங்கில் மட்டும் டார்கெட் செய்தால் போதுமானது.  எனவே அனுபவம் வாய்ந்த இஷான் கீசனுக்கு பதிலாக ஆரவள்ளி அவனிஷ் ராவ்வை ஏலத்தில் எடுக்க திட்டம் வைத்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் கடந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்தார். மேலும் இந்தியாவில் U19 அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக பேட்டிங்கும் செய்து வருகிறார்.

எனவே மும்பை இந்தியன்ஸ் அணி இவர் டார்கெட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா போன்ற வீரர்கள் அணியில் எடுத்து ஸ்டார் பிளேயராக உருவாக்கியது மும்பை அணி தான். எனவே இளம் வீரர் ஆரவள்ளி அவனிஷ் ராவ்வையும் ஸ்டார் பிளேயராக மாற்ற மும்பை அணி முயற்சி செய்யலாம். மேலும் ஏலத்தில் சில வெளிநாட்டு வீரர்களை எடுக்கவும் திட்டம் வைத்துள்ளனர். கடந்த சீசனில் சவுத் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸியை மினி ஏலத்தில் எடுத்து இருந்தனர். இந்த முறையும் அவரை ஏலத்தில் எடுக்க மும்பை அணி முயற்சி செய்யும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.