புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் தேசிய கல்விக் கொள்கை அமலாக்கப்பட உள்ளது. ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாகவும், தன்னாட்சி மற்றும் உள்ளடக்கியதாகவும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நிறைவு செய்த பிறகு, டிப்ளமோ, பட்டம் மற்றும் கவுரவ பட்டம் ஆகிய […]