நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை,

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80 வயது) இன்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “புகழ்பெற்ற திரைப்பட ஆளுமை டெல்லி கணேஷின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம். அவர் அசாத்தியமான நடிப்புத் திறமையால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவர் கொண்டுவந்த தனித்துவத்திற்காகவும், தலைமுறைகள் கடந்தும் பார்வையாளர்களுடன் இணையும் அவரது திறனுக்காகவும் அவர் அன்புடன் நினைவுகூரப்படுவார். அவர் நாடகத்தின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.