2026 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா? – இபிஎஸ் சூசகம்

திருச்சி: எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

“மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்த ஒத்த கருத்துள்ள அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையலாம். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்றபடி எந்த கட்சி தலைமையிலான கூட்டணியில் யார் வருவார் என்பது தெரியவரும்.

தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. மற்ற திட்டங்களுக்கு நிதி இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். முட்டுகாட்டில் கலைஞர் பெயரில் பன்னாட்டு அரங்கம் அமைக்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்காமல் தனித்தனியே போட்டியிட்டன. விரைவில் பாஜகவில் தேசிய அளவில் நிர்வாக ரீதியாக மாற்றங்கள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.