Delhi Ganesh : `இப்போது அண்ணா அமரராகி எல்லோரையும் அழவைத்துச் சென்றுவிட்டார்!' – எம்.எஸ்.பாஸ்கர்

உடல்நலக் குறைவால் இயற்கை எய்தியிருக்கிறார் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ்.

இவருக்கு வயது 81. இவர் நடிப்பில் கடைசியாக `இந்தியன் 2′ திரைப்படம் வெளியாகியிருந்தது. 100-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடியன், வில்லன் என பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் டெல்லி கணேஷ். தற்போது இவரின் மறைவுக்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், “டெல்லி கணேஷ் அண்ணா…..எனக்கு 18 அல்லது 20 வயதில் காத்தாடி அண்ணா நாடகக்குழுவில் எனது மூத்த சகோதரி நடித்தார். அப்போதுதான் முதன் முதலாக டெல்லி அண்ணாவை சந்தித்தேன். நான் நடிப்புத்துறைக்கு வந்த பிறகு எத்தனையோ படங்களில் அவரோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றேன்! அவர் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமிருக்காது! எல்லோரையும் மகிழ்வித்து மகிழ்வார்.

MS Baskar

அவரைச் சுற்றி நண்பர்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பர். இப்போது அண்ணா அமரராகி எல்லோரையும் அழவைத்து சென்று விட்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இயலவில்லை. கலந்து கொள்ளக் கூடாத சூழ்நிலை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். சென்று வாருங்கள் அண்ணா! எப்பிறப்பிலாவது மீண்டும் சந்திப்போம்! கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும்.” எனக் கூறியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.