மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

ராஜ்கிர்,

8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்கியது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்தியா தரப்பில் சங்கீதா குமாரி 2 கோல்களும், பிரீத்தி துபே மற்றும் உதிதா தலா ஒரு கோலும் அடித்து அணி வெற்றி பெற பங்காற்றினர்.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் தென் கொரியாவுடன் நாளை மோத உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.