கிழக்கு மாகாணத்திற்கு இன்று (நவம்பர் 10) விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) அறுகம்பே பகுதியின் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கண்டறிந்தார்.
இந்த விஜயத்தின் போது, பிரதேசத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்ளூர் சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அதற்கமைவாக, பிரதேசத்தின் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பாதுகாப்புச் செயலாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
சுற்றுலாப் பயணிகளின் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையிலும், இலங்கையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலும் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
பாதுகாப்பு செயலாளரின் இந்த இதன்போது பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.