பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் அருண் பிரசாத் கலந்து கொண்டிருக்கும் நிலையில், அர்ச்சனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சீசன் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே வந்த அர்ச்சனா தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால் அந்த சீசன் டைட்டில் வின்னர் ஆனார். இந்த சீசனில் பிக் பாஸில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார். அருணும், அர்ச்சனாவும் காதலித்து வருவதாக சில வருடங்களாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இதுகுறித்து இருவருமே எந்தவித விளக்கமும் பொதுவெளியில் தெரிவித்தது இல்லை. இந்நிலையில் அருண் நேற்றைய லைவில், “ஹாய் ஹர்லி நீ நல்லா இருக்கேன்னு நம்புறேன். நான் நல்லா இருக்கேன். இந்த வாரம் கேப்டனாக மாறியிருக்கிறேன். இன்றைக்கு உன்னுடைய பிறந்தநாள். பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். எப்போதும் நீ சந்தோஷமாக இருக்க வேண்டும்.
மிக விரைவில் கப்புடன் வந்து உன்னை சந்திக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை பார்த்துக்கொள். ஐ லவ் யூ. பாய்” எனப் பேசியிருக்கிறார். இதில் பெயரை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அர்ச்சனா ரவிச்சந்திரன் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த பதிவில், ” என்னுடைய பிறந்தநாள் பூர்த்தி அடைந்தது. இதற்காக நள்ளிரவு ஒரு மணி வரை காத்திருந்தேன். இது ஒரு அற்புதமான உணர்வு” எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகிவிட்டது என்று நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர்.
My Birthday is fulfilled
Waited till 1.00 AM to watch this
Thanks for this wonderful feeling ❤️#captain #wholesome #biggboss8tamil https://t.co/3fwmp81apY— Archana Ravichandran (@Archana_ravi_) November 11, 2024
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…