எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, நாளை (13) முதல், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12 ஆம் திகதி பாடசாலை விடுவிக்கப்பட்டதன் பின்னர், அந்தந்த கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், நவம்பர் 18ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.